சென்னை மெரினா கடற்கரையில் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மெரினாவில் பாதுகாப்பு அதிகரிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மெரினா கடற்கரைப் பகுதியில் புகைப்படக்காரரை வெட்டியதோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொண்ட 3 சிறுவர்கள் உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, கடற்கரைக்கு வருவோரின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

