கல்விதமிழ்நாடு

அரசுப்பள்ளியின் அவலநிலை : பெயர்ந்து விழும் சுவர்கள், 435 மாணவிகளுக்கு ஒரு கழிவறை !

ஈரோட்டில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசுப்பள்ளியின் அவலநிலை

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் ‘மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி’ இயங்கி வருகிறது. இங்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 435 மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் 15 ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பள்ளி துவங்குவதற்கு முன்பு பள்ளி வளாகத்தில் சத்துணவு மையங்களில் இரண்டு பக்கங்களிலும் இடிந்து விழுந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைக்கண்டு மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 435 மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் ஒரே ஒரு கழிவறை உள்ள அவலம் உள்ளது என தெரிவித்துள்ளனர். அரசு இப்பள்ளியை கவனத்தில் கொண்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், மாணவிகளின் உயிரில் அலட்சியம் கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related posts