அறிவியல்தமிழ்நாடு

சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம் – ஆர். பி. உதயகுமார் கைது !

திருமங்கலம் அருகே உள்ளே சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் கைது செய்யப்பட்டார்.

கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது . அதிக கட்டணம் வசூலிக்கும் கப்பலூர் சுங்க சாவடி அகற்ற வேண்டும் என மத்திய , மாநில அரசுகளுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

இதை கண்டித்து இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. . ஆனால் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முறையாக அனுமதி பெறவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போக சொல்லி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தத்துடன் பந்தல் அமைக்க முற்பட்டனர். இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் , உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Related posts