அறிவியல்இந்தியாமருத்துவம்

இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

கொரோனா தொற்று

கொரோனா பெருந்தொற்று பரவலால் பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர். இதுவரை இந்தியாவில் வந்த 3 கொரோனா அலைகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை மொத்தமாக முடக்கியது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கோவிஷீல்டு, கோவேக்சின் போன்ற தடுப்பூசிகள் கொரோனா பரவலை தடுக்க பெரிதும் உதவியது.

Vaccination for Animals

விலங்குகளுக்கு தொற்று

இந்நிலையில், மனிதர்களை போலவே சிங்கம், புலி போன்ற சில விலங்குகளுக்கும் கடந்த ஆண்டுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டன. விலங்குகளுக்கு என்று ஒரு தடுப்பூசி இல்லை என்பதால் விலங்குகள் அதிகளவில் தொற்றில் பாதிக்கப்பட்டன. இதனால் பல விலங்குகள் உயிரிழக்கும் சுழலும் ஏற்பட்டது. மேலும், ஜூலை மாதத்தில் 4வது அலை உச்சம் பெற கூடும் என்று நிபுணர்கள் கணிப்பில் கூறியிருந்தனர். இதனால் அரசு தடுப்பூசி போடும் பணிகளை  தீவிரப்படுத்தி வருகிறது

Vaccination for Animals

ஆராய்ச்சி நிறுவனம்

இந்நிலையில், அரியானாவை சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கான அனோகோவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு பல்வேறு கட்டங்களில் சோதிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர்.

விலங்குகளுக்கான தடுப்பூசி

அனகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசி டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றுக்கு எதிராகவும் செயல்படும் திறன் உள்ளது. பெரும்பாலான கொரோனா தொற்றுகளுக்கு எதிராகவும் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி உருவாக்கும் என்று ஐசிஏஆர் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts