முதல்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் தபேதார் நியமனம்.
அறிக்கை
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தபேதார், அலுவலக உதவியாளர்கள், சமையல்காரர், காவலாளி, நூலக உதவியாளர் ஆகிய பணி இடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட்டப்படுத்திருந்தது. இதற்கான கோவில் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தால் போதுமானது.
தகுதி
மேலும், பணிக்கு ஏற்றபோல் சம்பளம் 15,000 ரூபாய் முதல் 50,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8ம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஆனால் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு 35 வயது வரை இருக்கலாம் என்று தளர்வு அளிக்கப்படு இருந்தது. விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு இருந்தது.
பெண் தபேதார்
இதன் அடிப்படையில் நடக்கப்பட்ட தேர்வில் அனைத்து காலி இடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இப்படி தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் திலானி. இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளாவிற்கு தபேதாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பணி சீருடை
ஆண் தபேதார்கள் பணியின் போது வெள்ளை நிற சட்டை, வெள்ளை நிற பேன்ட் அணிந்து, இடுப்பில் சிவப்பு பெல்ட், தலையில் சிவப்பு தலைப்பாகை அணி வருவார்கள். பெண் தபேதாரின் பணி சீருடையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு வெள்ளை நிற சுடிதார், இடுப்பில் சிவப்பு பெல்ட், தலையில் சிவப்பு தலைப்பாகையையும் வழங்கியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்காணிப்பு பணி, வாகனங்கள் பராமரிப்பது, ஓட்டுநர், பெண் பதிவாளர் ஜெனரல் என பல பதவிகளில் பெண்கள் பணியாற்றி வரும் நிலையில் தற்போது தபேதார் பணியிலும் பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கி வரலாறு படைத்தது வருகிறது.