வைகாசி விசாக தினத்தன்று ஜூன் 12 தேதி காலை மதுரையில் இருந்த மாலை பழனி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தென்னக ரயில்வே அறிவிப்பு
இது குறித்து தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவிப்பில், வருகின்ற 12ம் தேதி அன்று பழனியில் வைகாசி விசாக திருவிழா பெரும் விமர்சியாக நடைபெற உள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக மதுரை டூ பழனி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில் ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை டூ பழனி
அதன்படி மதுரை டூ பழனி இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு 1.25 பழனி சென்று சேரும். மறுமார்க்கத்தில் பழனி டூ மதுரை முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் பழனியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் ஜூன் 12 அன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைக்கு நன்றி
இதனிடையே, தனது கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தரவிட்ட தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி நன்றி தெரிவித்துள்ளார்.
எனது கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி !
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு (ஜூன்-12) பழனி, திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என தெற்கு ரயில்வே
பொதுமேலாளருக்கு இன்று காலை கடிதம் எழுதி இருந்தேன். 1/2 pic.twitter.com/dWQW5egrk4— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 9, 2022
சு.வெங்கடேசன் எம்.பி
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ட்விட்டரில், எனது கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்க உத்தரவிட்ட தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஜூன் 12 தேதி பழனியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு இன்று காலை கடிதம் எழுதி இருந்தேன். அது உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு வெற்றியடைந்துள்ளது.
அதேபோல் வைகாசி விசாகத்தன்று (ஜூன் 12) காலை மதுரையில் இருந்து பழனிக்கும் , மாலை பழனியில் இருந்து மதுரைக்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டிருந்தார்.