சமூகம்தமிழ்நாடு

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு!

மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசு விழா

இதனை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அமைப்புகள் சதய விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று இந்த ஆண்டு முதல் இனி வரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தஞ்சாவூரில் உள்ள ராஜராஜ சோழனின் மணிமண்டபம் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related posts