பிரபல நடிகை
2010-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. அதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின்னர் சிறிதுகாலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இதனிடையே ஹன்சிகாவும் சோகேல் என்பவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சோகேல், ஹன்சிகாவிடம் பூங்கொத்து கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Now&Forever ♥️ https://t.co/Mbq3ZM52hb
— Hansika (@ihansika) November 2, 2022