சினிமாவெள்ளித்திரை

‘கைதி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகை!

கைதி ரீமேக்

தமிழில் மாநகரம், மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கைதி’. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர்.

பிரபல நடிகை

இதனிடையே ‘கைதி’ திரைப்படத்தை ‘போலோ’ என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் நடிகர் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், ‘போலோ’ படத்தில் நடிகை அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related posts