பிரபல நடிகர்
உலகின் பிரபல பணக்காரரான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துவதற்கு இனி மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்நிலையில், அவரை கலாய்க்கும் வகையில் நடிகர் சிபி சத்யராஜ் ‘உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்’ என என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022