இந்தியாமருத்துவம்

ஒடிசாவில் பரபரப்பு : நாய் கடித்ததில் நாய் போல் குரைத்த நபர்!

நாய் கடித்த நபர்

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தை அடுத்த உடய்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ்பியூரா. கூலி தொழிலாளியான இவரை 6 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்துள்ளது. ஆனால் இதற்காக ராஜேஷ்பியூரா முறையான சிகிச்சை பெறவில்லை என தெரிகிறது. இந்நிலையில், திடீரென நாய் போல் குரைத்துள்ளார். இதனால் அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையில் நாய் கடித்ததும் ராஜேஷ்பியூரா உடனடியாக சிகிச்சை பெறாததால் அவருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts