தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை
தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.