விதிமுறைகள்
வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது இதனை முன்னிட்டு வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்து வருகிறார்கள். இதனையொட்டி பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக தீயணைப்பு துறை பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. அதன்பெயரில் கல் மற்றும் கான்கிரீட் கட்டிடமாக பட்டாசு கடை அமைக்கப்பட வேண்டும். தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், வேறு எந்த பொருட்களையும் பட்டாசு கடைகளில் விற்பனை செய்ய அனுமதியில்லை. திருமண மண்டபங்களில் பட்டாசு கடைகளை அமைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.