சீமான் பதிவு
2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். அதனைத்தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தற்போது சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வரும் விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை வெற்றிமாறன் இயக்குவார் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார். pic.twitter.com/e4IwrcG51c
— சீமான் (@SeemanOfficial) October 5, 2022

