சினிமாவெள்ளித்திரை

பாடகராக களமிறங்கும் பிரபல நடிகர்!

பிரபல நடிகர்

தமிழில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். இவர் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘சர்தார்’. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, பிரபல ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘சர்தார்’ திரைப்படத்தின் ‘ஏறுமயிலேறி’ என்ற முதல் பாடலை நடிகர் கார்த்தி பாடியுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts