தடை உத்தரவு
‘கோல்டு’ படத்தை அடுத்து நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான திரைப்படம் ‘கனெக்ட்’. இதில் சத்யராஜ், வினய், ஹனியா நஃபிஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 22-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே இத்திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி படக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.சரவணன், ‘கனெக்ட்’ படத்தை சட்டவிரோதமாக வெளியிட 2634 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.