சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் திரிஷா பட டிரைலர்!

வைரல் டிரைலர்

‘பொன்னியின் செல்வன்’ படத்தை தொடர்ந்து நடிகை த்ரிஷா நடித்துள்ள திரைப்படம் ‘ராங்கி’. இப்படத்தை எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய எம்.சரவணன் இயக்க, லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ளது. மேலும், ஸ்ரீ சத்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதன்படி இத்திரைப்படம் வருகிற 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘ராங்கி’ படத்தின் டிரைலர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக திரிஷாவின் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

Related posts