சமூகம் - வாழ்க்கைசினிமா

பிரபல குணச்சித்திர நடிகர் ‘மாயி’ சுந்தர் காலமானார்!

பிரபல நடிகர்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடித்து பிரபலமானவர் ‘மாயி’ சுந்தர். இவர் குள்ளநரி கூட்டம், மிளகாய், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டாகுஸ்தி, கட்சிக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தனது சொந்த ஊரான மன்னார்குடியில் வசித்து வந்த இவர் மஞ்ச காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 50 வயதாகும் ‘மாயி’ சுந்தர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts