சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் விஜய் சேதுபதியின் ஹிந்தி பட போஸ்டர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். அதன்பெயரில் தற்போது பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ என பெயரிடப்பட்டுள்ள ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும், இப்படத்தை ‘அந்தாதூன்’ பட புகழ் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார். இந்த 23-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படம் தமிழ், ஹிந்தி மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts