தமிழ்நாடு

தூத்துக்குடியில் மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் உயிரிழப்பு !

மதுபோதையில் தண்டவாளத்தில் உறங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி உயிரிழப்பு. ஒருவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மூன்றாவது பசும்பொன் நகரை சேர்ந்தவர் காளிபாண்டி மகன் கா.மாரிமுத்து (20). திருவிக நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் ச.மாரிமுத்து(30). நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் குழந்தைதுரை மகன் ஜெபசிங்(23). இந்த மூன்று நண்பர்களும் கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு நடந்த நண்பரின் திருமண வரவேற்பு நிகழிச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். பின்னர் இரவு 10 மணி அளவில் தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

boys

மதுபோதை

மேலும், போதை அதிகமானதால் மூவரும் அங்கேயே படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில், அதிகாலையில் 3 மணி அளவில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சரக்கு ஏற்றிகொண்டு வந்த ரயில், தண்டவாளத்தில் உறங்கி கொண்டிருந்த இரண்டு மாரிமுத்து மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் உயிரிழந்தனர். தண்டவாளத்தின் அருகே உறங்கி கொண்டிருந்த ஜெபசிங் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

ரயில்வே போலீஸ்

இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் ஆனந்தராஜன், தூத்துக்குடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இரண்டு சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெபசிங் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து தென்பாகம் காவல் நிலையத்தில் கடந்த 9 மாதத்திற்கு முன் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர்.

Railway Track

கொலை குற்றவாளிகள்

காளி பாண்டி மகன் மாரிமுத்து மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் ஜெபசிங் மீது சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. இவர்கள் மூன்று பேருமே கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை

மூவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் இந்த சம்பவத்தில் வேறு எதுவும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. தண்டவாளத்தில் படுத்து தூங்கிய போது ரயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts