சினிமாவெள்ளித்திரை

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தானா !

கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கமலின் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

விக்ரம் படம்

2018ம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்ற படம் விஸ்வரூபம் 2. இந்த படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனா நிலையில் கமலின் அடுத்த படமான விக்ரம் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளார்கள். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

 Mahesh Narayanan

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

பல முன்னணி நடிகர்கள் நடித்திருப்பதாலும், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் எடுக்கும் படம். மேலும், கமல்ஹாசன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் படம் என்பதாலும் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனை தக்க வைக்கும் வகையில் விக்ரம் படக்குழுவும் பல அதிரடியானா ப்ரோமோஷன்களை செய்தது. சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வது, புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் ட்ரைலரை திரையிடுவது என்று உலகளவில் ப்ரோமோஷன் செய்தனர்.

Kamal Haasan's Vikram

விக்ரம் வெற்றி

இதனிடையே, நேற்று திரையரங்கில் வெளியானது விக்ரம் படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் விக்ரம் படத்தின் ஒரு நாள் வசூல் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வரை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில வாரங்களுக்கு விக்ரம் படம்தான் திரையரங்குகளில் ஓடக்கூடிய சூழல் உள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தியன் 2

விக்ரம் படத்திற்கு பிறகு கமல், இந்தியன் 2 படத்தில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டைரக்டர் ஷங்கர், தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை இயக்கி வருவதால் இந்தியன் 2 படத்தை எப்போது துவங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கமல், கொம்பன், விருமன் போன்ற படங்களை இயக்கிய முத்தையா படத்தில் நடிக்க போகிறார் என்று கூறப்பட்டது.

Kamal Haasan

கமலின் புதிய படம்

இந்நிலையில், கமல் ஹாசனின் அடுத்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் மலையாளத்தில் மாலிக், நயட்டு, சி யூ சூன் போன்ற படங்களை இயக்கியவர். மகேஷ் நாராயணன், கமல் நடித்திருந்த விஸ்வரூபடம் 2 படத்தின் எடிட்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த புதிய படத்தை படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts