ஃபிட்னஸ்அரசியல்இந்தியாதமிழ்நாடு

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் நீட்டிப்பு – 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் !

பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் தற்போது ஐந்து வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் 40 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

PMEGP

PMEGP என்பது பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம். இந்த வேலை வாய்ப்பு திட்டம் 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 7.8 லட்சம் குறு நிறுவங்களுக்கு, ரூபாய் 19,995 கோடி ரூபாய் கடன் மானியத்துடன் வழங்கப்பட்டது. அதனால் நாட்டில் சுமார் 64 லட்சத்திற்கு மேலாக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. நிதி உதவி பெரும் நிறுவனங்களில் பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ளது. 50து சதவீத நிறுவனங்கள் பட்டியல் இன பெண்கள் மற்றும் பழங்குடினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

PMEGP

இத்திட்டத்தில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம், திருநங்கைகளின் விண்ணப்பங்கள் சிறப்பு வகை விண்ணப்பங்களாக கருதப்படும். அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.

Workers mills

2022- 2026

தற்போது வருகின்ற காலாண்டில் சுமார் 13 ஆயிரம் கோடி கடனாக வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தனது அறிக்கையில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரேதசங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக கடன் தொகை

வேலை வாய்ப்பு உருவாக்கும் இந்த திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுகளுக்கு வழங்கப்படும் கடன் 25 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. சேவை யூனிட்டுகளுக்கு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக அதிகரித்துள்ளது.

PMEGP form

ஒதுக்கப்படும் கடன் தொகையில் 25 சதவீதம் நகர்ப்புறங்களுக்கும், 35 சதவீதம் கிராமபுரத்திற்கும், 40 சதவீதத்தில் பெண்கள் மற்றும் பழங்குடினர்களுக்கும் வழங்கப்படும்.

அலுவலங்கங்கள்

தேசிய அளவில் நோடல் ஏஜென்சியாக செயல்பட்டு வரும் காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையத்தால் (KVIC) இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் (KVIC) அலுவலங்கங்கள், மாநில காதி மற்றும் கிராம தொழில் வாரியங்கள் (KVIB), மாவட்ட தொழில் மையங்கள்(DIC) மற்றும் வங்கிகள் மூலமாக செயல்படுத்தி வருகின்றன.

விண்ணப்பதாரர்களுக்கு கடன் வழங்க அனுமதி வழங்கிய பின்பு, அரசாங்கம் வழங்கிய வங்கிகள் மூலமாக நேரடியாக அவர்கள் வங்கி கணக்குகளில் கடன் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related posts