அரசியல்அறிவியல்இந்தியா

5 ஜி அலைக்கற்று ஏலம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

இந்தியாவில் தொலை தொடர்புத்துறைக்கு 5 ஜி – அலைக்கற்றை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் தொலை தொடர்புதுறை 

இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட்போன்கள் மற்றும் 4 ஜி தொழில்நுட்ப வருகைக்கு பிறகு மக்களின் தினசரி வாழ்க்கை முறை பெரிதளவில் மாற்றம் கண்டது. புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின. மொபைல்களின் மூலமே எல்லா தகவல் பரிமாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடிய தொழில்கள் எண்ணற்ற முறையில் உருவாகின. எல்லாத்தொழில்களும் இணையத்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது.  2015ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் 4 ஜி அலைக்கற்றின் பயன்பாடு தொடங்கியது.

5G india

டிஜிட்டல் இந்தியா

அரசின் கொள்கை முடிவுகளான டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்களுக்கு டிஜிட்டல் தொடர்பு என்பது முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. 2014-ம் ஆண்டில் ப்ராட்பேண்ட் பயனாளர்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்த நிலையில் தற்போது 80 கோடியாக உயர்ந்துள்ளது.

5ஜி ஏலத்திற்கு ஒப்புதல்

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடுவது தொடர்பாக மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சகம் வைத்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5 ஜி அலைக்கற்றுக்கான ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 ஜி சேவையை விட பத்து மடங்கு வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 5 ஜி சேவை அடுத்த இருபது ஆண்டிற்கு ஏலம் விடப்படவுள்ளது.

speed 5G NETWORK

வேகமெடுக்கும் வளர்ச்சி

இந்தியாவில் 5 ஜி தொழில்நுடப்பத்தை உருவாக்குவதற்காக இந்தியாவின் 8 தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு 5 ஜி சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வரவுள்ள 5 ஜி தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தலைமுறை தொழில்கள், புதிய நிறுவனங்கள் உருவாகும். அதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

Related posts