அரசியல்தமிழ்நாடு

ஒற்றைத் தலைமை சர்ச்சை எதிரொலி; ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல்!

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரட்டை தலைமை

ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ் என்று இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வருகிறது. இதனிடையே அதிமுகவில் திடீரென ஒற்றைத் தலைமை என்ற குரல் எழுந்தது. இதனால் அதிமுக ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என்று இரண்டாகப் பிரிந்து நிற்கிறது. இந்நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 5 நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

இதனால் அதிமுகவில் 5வது நாளாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்பட்டது. அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் ஜெயக்குமார் வாகனத்தை தாக்கினார்கள்.

ஆலோசனை கூட்டம்

இதன்த்தொடர்ச்சியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வைத்தியலிங்கம் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். ஜெயக்குமார் வந்தபோது சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் vs இபிஎஸ்

மோதல்

இதனையடுத்து ஜெயக்குமார் அலுவலகத்திற்குள்ளே சென்றுவிட்டார். அவருடன் வந்த மாரிமுத்து என்பவர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் ரத்தக் கறையுடன் வெளியே வந்த மாரிமுத்து, செயலாளர்களிடம், ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தன்னை ‘நீ என்ன எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவா’ என்று கேட்டு அடித்து வெளியேற்றிவிட்டதாக கூறினார்.

ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகத்தில் பரபரப்பான சுழல் நிலவியது.

Related posts