நாடு முழுவதும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை மக்கள் பார்வையிட அனுமதி இலவசம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மக்கள் தங்களது வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடியேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அனுமதி இலவசம்
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்கள் ஆகியவற்றை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை மக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

