விளையாட்டு

11,12 வது ஓவர்களில் களமிறங்க திட்டம்…தோனியை கோப்பையோடு வழியனுப்பும் முனைப்பில் சிஎஸ்கே!

ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் வருகிற மார்ச் 26 அன்று தொடக்கி மே 29 வரை நடைபெற உள்ளது. முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.

பேட்டிங் ஆர்டரில் மாற்றமா?

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இந்நிலையில், இது தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் எப்போதும் லோவெர் மிடில் ஆர்டரில் இறங்கி கலக்கும் தோனி இந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் ஆர்டரில் மாற்றம் கொண்டுவந்து முன்கூட்டியே இறங்குவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும், ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ் மேனாகவும் கேப்டனாகவும் பல வெற்றிகளை குவித்துள்ள தோனி, சிஎஸ்கே அணிக்கு பல ஐபிஎல் கோப்பைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அவரை கோப்பையோடு வழியனுப்ப சென்னை வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

கடந்த இரண்டு ஐபிஎல் தொடராக மோசமான விளையாட்டை வெளிப்படுத்திவரும் தோனி தனது கடைசி தொடரில் ஜொலிப்பார் என எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. கடந்த இரண்டு சீசனில் 30 போட்டிகளில் விளையாடிய தோனி 314 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2020ல் 200 ரன்களும், கடந்த சீசனில் 114 ரன்களும் மட்டுமே என தனது கரியரில் மோசமான பேட்டிங்கை வெளிக்காட்டியுள்ளார். இதை சரிசெய்யும் விதமாகவே இந்த வருட ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்கூட்டியே இறங்க திட்டம்போட்டுள்ளார் என கூறப்படுகிறது.

 

எப்போதும் 17, 18 வது ஓவர்களில் பேட்டிங் செய்ய களமிறங்கும் தோனி இந்த வருடம் 10, 11 வது ஓவர்களில் களமிறங்குவார் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பினிஷெர்ராக மட்டுமே இருந்து வந்த தோனி மிடில் ஆர்டரில் இறங்க இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தெளித்துவிட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு தோனி ஓய்வு பெறவேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

 

Related posts