விளையாட்டு

பிசிசிஐ யின் மாஸ்டர் பிளான்…சுவாரசியமான விதிமுறைகளோடு களமிறங்கும் 2022 ஐபிஎல் அணிகள்!

2022 கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 26 அன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கோலாகலமாக ஆரம்பம் ஆகுகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் மோதுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபு நாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடரை இந்த வருடம் இந்தியாவில் நடத்தும் பிசிசிஐ யின் முடிவை அனைவரும் வரவேர்த்துள்ளனர்.

அரபு நாடுகளில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பல விதமான சர்ச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டது. சார்ஜா, அபுதாபி, துபாய் என மூன்றே மைதானங்களில் ஒட்டுமொத்த ஆட்டமும் நடத்தப்பட்டதால், அங்குள்ள பிட்ச் குறித்தும், பனிப்பொழிவு குறித்தும் அனைவரும் எளிதாக யூகிக்க தொடங்கினர். டாஸ் வெல்வது என்பது ஒரு அணியின் வெற்றியை தீர்மானிக்கும் ஒன்றாக அமைய தொடங்கியது. ஐபிஎல் நீண்ட நாள் நடைபெறும் தொடர் என்பதால் தொடரின் பிற்பாதியில் ரசிகர்களே ஆட்டத்தின் தன்மையை கணிக்க ஆரமித்தனர்.

பிசிசிஐ யின் மாஸ்டர் பிளான்

இந்தியாவில் நடைபெறும் இந்த சீசனிலும் 5 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. 70 லீக் போட்டிகள் 4 மைதானங்களில் மட்டுமே நடத்த திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஆனால், ஆட்டத்தின் தன்மையை யாரும் கணிக்க முடியாதபடியும், டாஸ் ஓரு அணியின் வெற்றியை தீர்மானிக்க முடியாத வகையிலும் பிசிசிஐ ஒரு மாஸ்டர் ப்ளானை தீட்டியுள்ளது.

‘பிசிசிஐ யின் திட்டப்படி ஒவ்வொரு மைதானத்திலும் தலா 5 பிட்ச்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்போது சுழற்சி முறையில் இந்த பிட்ச்-கள் பயன்படுத்தப்படும். ஒவ்வொரு பிட்ச்-ம் வெவ்வேறு விதமாக செயல்படும் தன்மையோடு வடிவமைக்க பட்டிருக்கிறது. கேப்டன்களால் பிச்சை கணித்து அதற்கு ஏற்றவாறு பேட்டிங்கா? பௌலிங்கா? என்பதை முடிவு செய்யமுடியாது. ஆட்டத்தின் இறுதிவரை முடிவு என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இது ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை அதிகரிக்கும்’ என மைதானங்களின் பொறுப்பாளர் நதீம் மெமோன் தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில், 10 அணிகள் இரண்டு குரூப்புகள் என ஏற்கனவே சுவாரசியம் அதிகரித்துள்ள நிலையில், பிசிசிஐ யின் இந்த புதிய யுக்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts