விளையாட்டு

சூடு பறக்க களமிறங்கும் டெல்லி – லக்னோ அணிகள்!

வெற்றி லக்னோவிற்கா ? இல்லை டெல்லிக்கா ?

ஐபிஎல் போட்டியில் இன்று 7.30 மணியளவில் துவங்கும் 15 -வது லீக் போட்டியில் கேஎல். ராகுலின் லக்னோ அணியும் ரிஷப் பண்டின் டெல்லி அணியும் மோதுகிறது.

லக்னோ அணி

லக்னோ அணியை பொறுத்தவரையில் தான் விளையாடிய 3 போட்டியில் 2 வெற்றியையும் 1 தோல்லவியையும் பெற்று புள்ளி பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியின் ஃபார்ம் எதிரணியை அச்சப்பட செய்யும் விதமாக இருக்கிறது. துவக்க ஆட்டக்காரர்களான கேஎல். ராகுல் மற்றும் டி காக் அணிக்கு நங்கூரமாக திகழ்கின்றனர். குறிப்பாக கேப்டனான ராகுலின் ஆட்டம் அற்புதமாக உள்ளது.

மிடில் ஆர்டரில் களம் இறங்கும் லீவிஸ், தீபக் ஹூடா மற்றும் பாடோணி லக்னோ அணிக்கு பக்க பலமாக விளையாடி வருகின்றனர். 3 -வதாக களம் இறங்கும் மனிஷ் பாண்டேவின் ஆட்டம் சொல்லிக்கும் படியாக இல்லை. ஆல் ரௌண்டாரான ஹோல்டர் அணியில் இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. லக்னோ அணி பணிந்துவீச்சில் கவனம் செலுத்தவேண்டும். அண்டட்ரீவ் டை ,ஹோல்டர் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களின் அனுபவம் அணிக்கு வலுசேர்க்கும் விதமாக இன்று அமையும் என்று நம்பலாம்.

டெல்லி அணி

டெல்லி அணியை பொறுத்தவரையில் தான் விளையாடிய 2 போட்டியில் 1 வெற்றியையும் 1 தோல்லவியையும் பெற்று புள்ளி பட்டியலில் 7 -வது இடத்தில் உள்ளது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரிதிவ் ஷா மற்றும் ஸைபெர்ட் அணிக்கு நிலையான தொடக்கத்தை கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.

அணியில் டேவிட் வார்னர் மிச்சில் மார்ஸ் இல்லாதது பின்னடைவு, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மந்தீப் சிங், போவெல், கேப்டன் பண்ட் போன்றவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. பந்துவீச்சை பொறுத்த வரையில் கலீல், ரஹ்மான் மற்றும் தாகூர் அணிக்கு ஓரளவு நம்பிக்கை தருகின்றனர். சுழல் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் தன் பணியை திறம்பட செய்து வருகிறார். பந்துவீச்சில் நம்பிக்கை நட்சத்திரமான நோர்ட்ஜெ அணிக்கு திரும்பாதது டெல்லிக்கு வருத்தமளிக்கும் விதமாக உள்ளது.

Related posts