சினிமா

‘ஹாரி பாட்டர்’ தொடரை மிஞ்சும் மம்மூட்டியின் ‘CBI’

மம்மூட்டியின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் CBI. இதன் நான்கு பாகங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியாகி வெற்றி அடைந்துள்ள நிலையில் ஐந்தாம் பாகத்திற்கான டீசர் இப்போது வெளியாகி மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

CBI 5: The Brain - Official Teaser | Malayalam Movie News ...

சிபிஐ திரைப்படத் தொடரானது, கே.மது இயக்கிய மற்றும் எஸ்.என்.சுவாமி எழுதிய ஐந்து மலையாளப் படங்களை உள்ளடக்கிய ஒரு திரைப்படமாகும் . இதில் மம்முட்டி, சென்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் அதிகாரியான சேதுராம ஐயராக முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் 1988 இல் ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ எனும் தலைப்பில் திரைக்கு வந்தது. இதுதான் இப்படத்தின் முதல் பாகமாகும். இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 1989-ல் இரண்டாம் பாகமான ‘ஜெகரதா’ வெளியானது.மேலும் 2004-ல் ‘சேதுராம ஐயர் CBI’ மூன்றாம் பாகமாகவும், 2005-ல் ‘நாராயணன் CBI’ நான்காம் பாகமாகவும் எடுக்கப்பட்டு ரசிகர்களால் கொணடாடப்பட்டது.

இத்திரைப்படங்கள் ஒரு CBI அதிகாரியின் தொடர்கதையாக அமைத்துள்ளது. இதில் வரும் சேதுராம ஐயர் தலைமையிலான மூன்று சிபிஐ அதிகாரிகள் குழு, ஒரு கொலை வழக்கை விசாரணை செய்வதாக கதை அமைத்திருக்கும். அனைத்து படங்களிலும் மம்முட்டி சேதுராம ஐயராக நடித்துள்ளார். அணியின் மற்ற இரண்டு உறுப்பினர்கள் தொடரில் வேறுபடுகிறார்கள். இதுவரை வெளியான நான்கு படங்களுமே விக்ரம் என்ற கேரக்டரில் ஜெகதி ஸ்ரீகுமார் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். இதுபோன்று வேறுபாடுகள் நிறைந்த தொடர் படமாக தான் CBI அமைத்துள்ளது.

மம்மூட்டியின் இப்பதிவு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

CBI நான்கு பாகங்களையும் நீங்க பாத்துட்டீங்களா!