Editor's Picksசினிமாதமிழ்நாடுவெள்ளித்திரை

பிகில் பட பாடகி காலமானார் ! சோகத்தில் மூழ்கிய இசையுலகம் !

கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகியான சங்கீதா சஜித் உடல்நலக்குறைவால் காலமானார்.

சங்கீதா சஜித்

சங்கீதா சஜித் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி. சிறுவயது முதல் சங்கீதத்தில் ஆர்வம் கொண்டிருந்த சங்கீதா கர்நாடக சங்கீதமும் கற்று திகழ்ந்தார். தமிழில், தொடக்க காலத்தில் தேவா, சிற்பி, கீரவாணி, ஆதித்யன் ஆகிய இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி உள்ளார். முன்னணி இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

200க்கும் மேற்பட்ட பாடல்கள்

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் இசையமைப்பில் பாடல்களை பாடிய பெருமை சங்கீதா சஜித்துக்கு உண்டு.

10 சவரன் தங்க சங்கிலி

தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் முன்னிலையில் ‘ஞானப்பழத்தை பிழிந்து’ என தொடங்கும் பாடலை சங்கீதா பாடினார். அந்த பாடலில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஜெயலலிதா 10 சவரன் தங்க நெக்லசை பரிசாக வழங்கினார் என்ற தகவலும் உண்டு.

கம்பீர குரல்

சமீபத்தில், விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வெறித்தனம்’ பாடலின் முதல் வரியான ‘யாராண்ட’ என்னும் வரிகளை மிகவும் கம்பீரமாக பாடியவர் இவர் தான். இந்த பாடல் மற்றும் சங்கீதாவின் குரல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் பட தயாரிப்பாளரின் பரிதாப நிலை.. அடக் கொடுமையே! - Cinemapettai

 

சிறுநீரக கோளாறு

46 வயதான சங்கீதா கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். சங்கீதா திருவனந்தபுரத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று காலையில் சங்கீதா மரணமடைந்தார்.

இசைக்கலைஞர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் சங்கீதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts