தமிழ்நாடு

22 வயது இளம் பெண்…எட்டு மாதமாக நடந்த கேங் ரேப்…வீடியோ எடுத்து மிரட்டிய திமுக பிரமுகர் கைது!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பழக்கம் அதிகமாகி நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து பேசுவது வாடிக்கையான ஒன்றாக நடந்துள்ளது.

ஒரு நாள் அவ்வாறு இருவரும் தனிமையில் சந்தித்தபோது உல்லாசமாக இருந்துள்ளனர். இதை திருட்டுத் தனமாக வீடியோ எடுத்துள்ளார் ஹரிஹரன். அந்த வீடியோவை திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேரு என மொத்தம் 6 பேருக்கு அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை பயன்படுத்தி அந்த 22 வயது பெண்ணோடு உல்லாசகமாக இருக்க விரும்பிய 7 பேரும் கடந்த 8 மாதங்களாக அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர். வீடியோவை வெளியில் காட்டிவிடுவோம் என்று மிரட்டி தங்கள் இச்சைகளை நிறைவேற்றி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இந்த கொடூரங்களை தாங்க முடியாத அந்த 22 வயது பெண்…தங்கள் தெரிவில் இருக்கும் மாடசாமி இதற்கு உதவுவார், தன்னை காப்பாற்றுவார் என நம்பி நடந்தவற்றை அவரிடம் கூறியுள்ளார்.

மாறாக அந்த 7 பேருடன் சேர்ந்துகொண்டு மாடசாமியும் அந்த பெண்ணை தன் இச்சைகளுக்கு பயன்படுத்த தொடங்கியுள்ளார். இது போன்ற தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்க, என்ன செய்வதென்று தெரியாது தவித்த அப்பெண் சில நாட்களுக்கு முன் துணிச்சலாக போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரை விசாரித்த போலீஸார் திமுக நிர்வாகிகளான ஹரிஹரன், ஜீனைத் அகமது, பிரவீன், மாடசாமி, 4 பள்ளி மாணவர்கள் (10, 11 ,12 ஆம் வகுப்பு மாணவர்கள்) ஆகியோரை கைது செய்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை கண்முன் கொண்டுவரும் இந்த கொடூர செயலுக்கு கண்டனங்கள் அதிகரித்ததுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அந்த 22 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரங்கள் மிகுந்த வருத்தம் தரக்கூடியதாக இருக்கிறது. அந்த 8 பேரும் கைது செய்யப்பட்டது சிறிது ஆறுதலாக உள்ளது. குற்றம் செய்பவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிந்தபோது தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்யப்பட்ட வேண்டும் என்று பேசிய கனிமொழி, திமுக பிரமுகர்கள் ஈடுபட்டுள்ள இந்த சம்பவத்தின் கைதயும் ஆதரிப்பது வரவேற்க்கும் விதமாக உள்ளது.

முன்னதாக சாத்தான்குளத்தில் 2018 இல் லாக்கப்பில் மரணமடைந்த ஜெயராஜ், பெனிக்ஸ் சம்பவத்தில் கொதித்த கனிமொழி, அண்மையில் திமுக ஆட்சியில் வாழப்பாடியில் போலீஸாரால் தாக்குதலுக்கு உள்ளாகி தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவத்திலும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறு என்றால் அதை பாகுபாடின்றி தட்டி கேட்கும் போக்கை கனிமொழி கடைப்பிடித்து வருவது ஆறுதல் தரும் விதமாக உள்ளது.