சமூகம்தமிழ்நாடுமருத்துவம்

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் !

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பள்ளிகள் விடுமுறை

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இறுதியாண்டு தேர்வு நடைபெற்று முடிந்து தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறையில் உள்ளனர். இதனையடுத்து 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

 பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு
கொரோனா பரவல்

கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்வு ஒன்றில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் சந்தித்த அவர் கொரோனா தொற்று தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையில் 22 இடங்களில் தொற்றின் வேகம் அதிகமாகவுள்ளதாக கண்டறிய பட்டுள்ளது.

தமிழகத்தில் 42 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட இன்னும் செலுத்தவில்லை. 1.22 கோடி பேர் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தவில்லை. இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என்று மா. சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்
முக கவசம் கட்டாயம்

மேலும், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் முக கவசம் அணிய கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முக கவசம் போட வலியுறுத்திள்ளார். ஆனால் தமிழகத்தில் அரசு சார்பில் அப்படி எந்த அறிவிப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் முக கவசம் அணிவது கட்டாயம் தான் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்நிலையில், தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related posts