நம் நாட்டில் சில சமயம் மரத்தில் இருந்து பால், தண்ணிர் வருவது அதிசயம். ஆனால் தற்போது பார்க்கும் இந்த மரத்தில் ரத்தம் போன்ற திரவம் வருகிறது. இதன் உண்மை செய்தியை பார்ப்போம்.
இயற்கையின் அதிசயம்
இயற்கை சில நேரம் அற்புதங்கள் செய்து நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும். சமீபகாலமாக சமூக வலைத்தளம் மூலமாக சில அற்புதங்களை பார்த்து வருகிறோம். சில சமயத்தில் சமூக வலைதளத்தில் போலியான செய்திகளும் பரவி வருகின்றன. ஆனால் நம் தற்பொழுது பார்த்து வரும் மரத்தை வெட்டினால் ரத்தம் போன்ற திரவம் வருவது உண்மையான ஒரு நிகழ்வு.
ஆம், ஏமனில் காணப்படும் இந்த மரத்தை வெட்டும்போது ஏற்படும் தனி சிறப்பு என்னவென்றால், அதை வெட்டினால் சிவப்பு நிறத்தில் அடர்த்தியான திரவம் வெளியேறுகிறது. இது மரம் தன்னை வெட்டும் போது ரத்தக்கண்ணீர் சிந்தி அழுவது போன்ற தோற்றத்தை தருகிறது. இந்த மரத்தின் பெயர் டிராகன் பிளட் ட்ரீ, அதாவது டிராகன் ரத்த மரம் என்பதாகும்.
தனித்துவம்
இது இயற்கையில் தனித்துவமான மரம், சாதாரண மரங்களை போல வளராமல் மாறாக தலைகீழாக வளரக்கூடியது. சகோட்டா தீவுகளில் காணப்படும் இந்த மரம் வளர்வதற்கு மிக குறைவான தண்ணீரே தேவைப்படும். ஆனால் இந்த மரம் நன்றாக செழித்து வளர வேண்டும் என்றால் அதிக வெப்பம் தேவைப்படும். இதன் நிலம் 33 அடி முதல் 39 அடி வரை வளரும். இதன் ஆயுள் 650 ஆண்டு காலம் வரை இருக்கும் என கருதப்படுகிறது.
சிவப்பு நிற திரவம்
மேலும், இந்த மரங்கள் கீழே இருந்து முற்றிலும் தட்டையானவை மற்றும் அவற்றின் கிளைகள் மேல்நோக்கி வளரும் போது தடிமனாக வளருகிறது. அதன் இலைகள் ஒரு குடை போன்ற வடிவத்திலும், அடர்த்தியாக உள்ளன . இது தவிர, இந்த மரத்தின் மிகப்பெரிய அம்சம் சிவப்பு நிற பிசினை சுரப்பது ஆகும். நீங்கள் இந்த மரத்தை வெட்டினால், மனித ரத்தத்தை போன்ற அடர்த்தியான சிவப்பு நிற பிசின் வெளியேறுகிறது.
மக்களின் நம்பிக்கை
இந்த ரத்த நிற பிசின் போன்ற திரவம் பற்றிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஏமனில் உள்ள மக்கள் இந்த ரத்த நிற பிசின் திரவத்தை காய்ச்சல் முதல் அடிபட்ட புண்கள் வரையிலான நோய்களை குணப்படுத்துகிறது என்று கூறுகின்றனர். ஏமனில் உள்ள மக்கள் இந்த சிவப்பு நிற திரவத்தை எடுத்து ஓவியங்களுக்கு வண்ணம் தீட்ட பயன்படுத்தி வருகின்றனர்.