அறிவியல்

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் – வாழ்க்கை குறிப்புகள்

விக்ரம் சாராபாய் அவர்களின் குடும்பம் நல்ல வளமான குடும்பம். ஆகையினால் அவர் நினைத்ததை படிக்கும் வாய்ப்பு எளிமையாக அவருக்கு கிடைத்தது. இளமை பருவத்தில் அறிவியல் மற்றும் கணிதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

அகமதாபாத்தில் இருக்கும் குஜராத் கல்லூரியில் இடைநிலை அறிவியல் தேர்வில் தேர்ச்சி அடைந்த பின்னர் இங்கிலாந்து நாட்டிற்கு மேற்கொண்டு கல்வி கற்பதற்காக பயணம் மேற்கொண்டார். அங்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியலில் இளநிலை பட்டம் [Tripos in Natural Sciences] பெற்றார்.

 

பின்னர் இந்தியா திரும்பிய விக்ரம் சாராபாய் பெங்களூருவில் இருக்கும் Indian Institute of Science இல் காஸ்மிக் கதிர்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1942 ஆம் ஆண்டு ‘Time Distribution of Cosmic Rays’ எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.

மீண்டும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு திரும்பி காஸ்மிக் கதிர்கள் குறித்து தனது ஆராய்ச்சியை விரிவுபடுத்தி டாக்டர் பட்டம் பெற்றார்.

சுதந்திரம் அடைந்திருக்கக்கூடிய இந்தியாவிற்கு அறிவியல் தேவை இருக்கிறது என்பதனை புரியவைத்து தனது குடும்பம் நடத்துகிறது அறக்கட்டளை மூலமாக Physical Research Laboratory (PRL) எனும் அமைப்பை ஏற்படுத்தினார்.

இந்தியாவின் இரண்டாவது IIM கல்லூரியினை அகமதாபாத்தில் நிறுவினார்.

1963 ஆம் ஆண்டு தும்பா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் ராக்கெட் பறந்தது. இந்த ஏவுதளத்தை நிறுவியவர் விக்ரம் சாராபாய். இதற்க்கு உறுதுணையாக இருந்தவர் அணுசக்தி விஞ்ஞானி ஹோமி பாபா.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என போற்றப்படும் விக்ரம் சாராபாய் தான் இஸ்ரோ எனும் அமைப்பினை உருவாக்கியவர். இன்று சந்திரயான் 2 வரை முன்னேறி இருக்கிறது. அதில் இருக்கும் லேண்டர் விக்ரம் சாராபாய் அவர்களின் பெயரை குறிக்கும் விதமாகத்தான் “விக்ரம்” என பெயரிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்ம பூஷன் (1966) மற்றும் பத்ம விபூஷண் (1972) வழங்கி கெரவிக்கப்பட்டுள்ளார்.

Related posts