இன்றைய தொழில் யுகத்தில் ஒரே பொருளை வெவ்வேறு தரத்துடன் பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. நல்ல பொருளை “Brand” பெயரில் விற்பனை செய்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட நிறுவனம் தயாரிக்கும் பிற பொருள்களின் மீதான நம்பிக்கையையும் அது கூட்டும்.
தரமான பொருள்களை உற்பத்தி செய்வது மட்டுமே விற்பனையை பெற்றுத்தந்தது விடாது. அதோடு சேர்த்து பிராண்டிங் செய்திடும்போது மக்களின் நம்பிக்கையை பெரும்.
ஒரு நல்ல நிறுவனத்தின் பொருளை மக்கள் நிச்சயமாக அடுத்தவர்களுக்கு பரிந்துரைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பெயரிலேயே தொடர்ச்சியாக நல்ல பொருள்களை விற்பனை செய்திடும்போது அந்த நிறுவனத்தின் பெயர் அல்லது லோகோ போன்றவை மக்களின் மனதில் எளிமையாக பதிந்துவிடும். புதியவர்களுக்கு பரிந்துரை செய்திட அல்லது விளம்பரம் செய்திட கூட எளிமையானதாக இருக்கும்.
ஒரே விதமான பொருள் இருவேறு நிறுவனங்களில் விற்பனைக்கு வந்தாலும் மக்கள் ஒரு நிறுவனத்தின் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். விலை சற்று அதிகமானதாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் வாங்கினால் நன்றாக இருக்கும் என நம்புவார்கள். அதற்க்கு காரணம் “பிராண்டிங்” தான்.
நீங்கள் ஒரு நிறுவனத்தை துவங்குகிறீர்கள் எனில் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. பிராண்டிங் செய்வதன் துவக்கப்புள்ளி “விளம்பரம்”. அதற்கடுத்ததாக இருப்பது “தரம்”.
பிராண்டிங் என்பது ஏதோ ஒரு இரவில் கிடைத்துவிடக்கூடியது அல்ல, தொடர்ச்சியாக சிறப்பான சேவையை செய்வதன் மூலமாகவே நல்ல “பிராண்டிங்” ஐ உருவாக்கிட முடியும். ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அந்த பிராண்டிங்கே உங்களுக்கு எதிரானதாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு.