ஆன்மீகம்

எல்லாம் வல்ல கச்சி ஏகம்பனே ! – காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் குறிக்கும் . இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது.

இத்தலத்தின் இறைவியான ஏலவார்குழலி அம்மையார், உலகம் உய்யவும், ஆகமவழியின்படி ஈசனை பூசிக்கவும் கயிலையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கு கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார்.

அப்பொழுது கம்பையாறு பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார்.வேதமே ஒற்றை மாமரமாகத் திகழ, அதன் கீழ் எழுந்தருளியுள்ள மூலவர் பெயர் ஏகாம்பரநாதர்.

இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கம். உமா தேவியார் மணலில் தான் பிடித்த லிங்கத்தை, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருக்க, ஆரத்தழுவிய அடையாளம் லிங்கத்தில் காணலாம். லிங்கத்திற்கு பின்னால் அம்மையும், அப்பனும், அமர்ந்த நிலையில் உள்ளனர்.

மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது. ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, ஆம்பரம் என்று ஆயிற்று.  ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று ஆயிற்று.

இக்கோவிலில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித்திருமஞ்சனம், ஆடி கிருத்திகை, நவராத்ரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

இந்த கோவிலின் தலவிருட்சம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரமாகும். இம்மரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த நான்கு கிளைகளிலும் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பதே இதன் சிறப்பு.

இக்கோவிலில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித்திருமஞ்சனம், ஆடி கிருத்திகை, நவராத்ரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.

 

 

Related posts