சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுவணிகம்

ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது !

ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்த கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

சென்னை, போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்கபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. புகாரின் பேரில் துணை ஆய்வாளர் பிரதீப் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அருண்குமார் என்பவரை போரூர் பகுதியில் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்தபோது கைது செய்தனர். விசாரணையில், ராமாபுரத்தில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து கொண்டே அவர், ஆன்லைனில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவருக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர், தேர்வர் ஏற்கனவே பெங்களூருவில் போதை பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்பது தெரியவந்தது.

Related posts