அரசியல்கல்விசமூகம்தமிழ்நாடு

பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் – நாம் தமிழர் சீமான் வலியுறுத்தல் !

அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுத்தியுள்ளார்.

நாம் தமிழர் சீமான்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் செயலை வன்மையாக கண்டிகிக்கிறோம். ஏற்கனவே திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில்  நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் அரசின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. தற்காலிக ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளும் வழங்கப்படுவதில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts