சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஒலி மாசை ஒழிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறுத்தை சிவா
கார்த்தி நடிப்பில், 2011ம் ஆண்டு வெளியான ‘சிறுத்தை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அதன்பிறகு நடிகர் அஜித் குமாரை வைத்து ‘வீரம்’ படத்தை இயக்கினார். அதனைத்தொடர்ந்து ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய குறிப்பிடத்தக்க படங்களை இயக்கியதன் மூலம் தமிழில் பிரபலமானார். இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கினார். மேலும், தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
ஒலி மாசு
இந்நிலையில்,சிறுத்தை சிவா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரைப்பட படப்பிடிப்பு தளங்களில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி ஏற்போம். அந்த வகையில் அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பிகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்து ஒலி மாசை ஒழிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.