அரசியல்சமூகம்சுற்றுசூழல்தமிழ்நாடுமருத்துவம்

கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் – முதல்வர் அறிவுரை !

தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறித்தியுள்ளார்.

அதிகரித்துவரும் கொரோனா

இந்தியாவில் தினசரி கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் தமிழகத்தில் சற்று குறைந்து இருந்த கொரோனா பாதிப்பு கடந்த நாட்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 200ஐ தண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது.

Covid

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மக்களிடம் எடுத்து கூறி, இதனை கட்டுப்படுத்தும் விதமாக முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, கொரோனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்திருந்தார்.

ஆலோசனை கூட்டம்

இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தல் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை சுகாதாரத்துறை , உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை போன்ற துறைகளை ஈடுபடுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Stalin

கட்டுப்பாடுகள்

மேலும், பணி செய்யும் இடங்கள், திருவிழாக்கள், திருமணங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்களிடையே ஒருசிலர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும்போது, இவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பு செய்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

Covid

தொடர் கண்காணிப்பு

கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்திடவும் போதிய பரிசோதனைகள், தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை முறையாக பின்பற்றிட பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

Related posts