அரசியல்தமிழ்நாடு

என்றும் அதிமுக தான் உண்மையான எதிர்க்கட்சி – ஜெயக்குமார் !

பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது மலிவானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேச்சு

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஏற்காடு தொகுதியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பாரதிய ஜனதா கட்சி பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. மக்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கட்சியாக திமுக செய்யும் அவலங்களையும் ஊழல்களையும் அவ்வப்போது தட்டிக் கேட்டு வருவதாக தெரிவித்தார். இதனால் கருத்தியல் அடிப்படையில் பாரதி ஜனதா கட்சி தான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது என்று அண்ணாமலை கூறினார்.

Annamalai

அதிமுக பொதுக்குழு கூட்டம்

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் இடம்பெற உள்ள தீர்மானங்கள் குறித்த ஆலோசனை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஆர் பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Jayakumar

செய்தியாளர்கள் சந்திப்பு

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். திமுக அரசின் ஓராண்டு ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டும் விதமாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் இடம்பெறும் என்று கூறினார். இதனையடுத்து அண்ணாமலை பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தங்கள் கட்சியை வளர்த்துக்கொள்ள எதிர்க்கட்சி என்று மாயை பிரசாரம் செய்து வருகிறது. என்றும் அதிமுக தான் உண்மையான எதிர்க்கட்சி. ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து அதிமுக விலகாது என்று கூறினார்.

மேலும், பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா கூறிய, நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பான கேள்விக்கு, மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைப்பது தவறு. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

Related posts