சுற்றுசூழல்தமிழ்நாடு

மே 4 முதல் அக்னி வெயில் ஸ்டார்ட் – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

கோடைகால வெயில்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி அனைத்து மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. சில மாவட்டத்தில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. குறிப்பாக கடந்த நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 107 டிகிரியை தாண்டியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் கத்தரி வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

கத்தரி வெயிலின் தாகம்

தமிழகத்தில் மே மாதத்தில் கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் மே 4 தேதி முதல் தொடங்கி மே 28 தேதி வரை நீடிக்கும். தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். முக்கியமாக சென்னை, வேலூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை சற்று கூடும்.

மாவட்ட ஆட்சியர் அறிவுரை -வேலூர்

மாவட்ட ஆட்சியர் திரு. குமாரவேல் பாண்டியன் அவர்களின் அறிவுரை:

வேலூரில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் மக்கள் அனைவரும் பகல் 9 மணி முதல் 3 வரை குழந்தைகள், முதியவர்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் அனைவரும் குடை, குடிநீர்,  துணி உள்ளிட்டவை எடுத்து செல்லவேண்டும்.

வெயில் காலங்களில் நீர்சத்து மிகுதியான உணவு, பழவகைகள், காட்டன் துணிகள் முதலியவற்றை எடுத்த கொள்ளவேண்டும். நோயாளிகள் அனைவரும் சரியான நேரத்துக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ளவும்.

சில குறிப்புகள்

குறிப்பாக இதய நோயாளிகள், வலிப்பு நோயுள்ளவர்கள், வெப்ப வாதம் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக அதிகமான வியா்வை அல்லது வியா்வை வராமல் இருப்பது, திடீா் மனநிலை மாற்றங்கள், இதய துடிப்பில் மாற்றங்கள், மயக்கம், தாகம், தலைவலி ஆகியவை அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ளுங்கள்.

அவ்வவ்போது நீர்மோர், எலுமிச்சை சாறு, தண்ணீர் ஆகியன எடுத்துக்கொள்ளவும். செயற்கையான குளிா்பானங்களை தவிா்க்க வேண்டும். வீட்டிலுள்ள உள்ள கால்நடைகளை நிழல்களில் வைத்து அதற்கு தேவையான தண்ணீர் மற்றும் தீவனங்கள் வைத்து பராமரிக்க வேண்டும் எனகூறியுள்ளார்.

Related posts