வணிகம்

ஜிப் உருவான சுவாரஸ்ய வரலாறு

ஆரம்ப காலகட்டங்களில் ஆடைகளை மூடுவதற்கு பட்டன்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றும் கூட நாம் சட்டைகளுக்கு அதே முறையைத்தான் பயன்படுத்துகிறோம்.இதற்க்கு மாற்றாக வந்தது தான் ஜிப்.  பேண்ட், பேக், சூட்கேஸ் என அனைத்திலும் இன்று நாம் பயன்படுத்தும் நவீன ஜிப் உருவான வரலாற்றை பார்ப்போம் .

தையல் இயந்திரத்தை உருவாக்கிய எலியாஸ் ஹோவ் [Elias Howe] என்பவர் தான் முதலில் ஜிப் போன்றதொரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் 1851 ஆம் ஆண்டு “Automatic, Continuous Clothing Closure என்பதற்கான காப்புரிமையையும் வாங்கினார்.

ஆனால் அவர் தையல் இயந்திரத்தை விற்பனையாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபடியால் ஜிப்பை மார்க்கெட் செய்வதில் அக்கறை செலுத்திடவில்லை.

சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, விட்காம்ப் ஜுட்சன் என்பவர் ஹோவின் யோசனையை மேம்படுத்தி “Clasp Locker” ஜிப்பை கொண்டுவந்தார். ஆரம்பத்தில்  காலணிகளுக்கு பயன்படுத்த இதனை கண்டறிந்தார். பின்னர் இதனை உருவாக்கிட Universal Fastener என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.

தற்போது பயன்படுத்தப்படும் மாடர்ன் ஜிப்பை கிதியோன் சண்ட்பேக் [Gideon Sundback] என்பவர் தான் 1913 இல் உருவாக்கினார். இவர் Universal Fastener நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இவர் 1917 ஆம் ஆண்டு “Separable Fastener” என்ற ஜிப்பிற்க்காக காப்புரிமை பெற்றார்.

1 இஞ்ச்க்கு 10 என்ற விகிதத்தில் இந்த ஜிப் இணைப்பான்கள் வடிவமைக்கப்பட்டன. அதேபோல இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டுள்ள ஜிப் இணைப்பான்கள் ஒரு மேல் அடுக்கு டீத் மூலமாக இணைக்கப்பட்டது.

இன்று நாம் பயன்படுத்தும் “Zipper” என்ற பெயரை B.F. Goodrich என்ற நிறுவனம் தான் பயன்படுத்தியது. ஆரம்பத்தில், பூட்ஸ் மற்றும் பைகளில் zipper முக்கியமாக பயன்படுத்தப்பட்டன.

அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஜிப் என்பது ஆடைகளில் பயன்பாட்டுக்கு வந்தது. பேண்ட்களில் பட்டன் பயன்பாட்டுக்கு மாற்றாகத்தான் முதன் முதலில் ஜிப் பயன்படுத்தப்பட்டது.

ஜிப் கண்டுபிடிக்கப்பட்ட பின், ஆயத்த ஆடைகளின் விற்பனையில் புதிய புரட்சியே ஏற்பட்டது. நவீன ஆடை அலங்கார நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மேம்படுத்த  ஜிப் உதவியது.

Related posts