சமூகம்சினிமா

‘சின்ன கலைவாணர் விவேக் சாலை’ – அரசாணை வெளியிட்ட முதல்வர்!

சென்னை: கடந்த ஆண்டு மறைந்த நடிகர் விவேக் வசித்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என்று விவேக்கின் மனைவி, தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் அவரது பெயரை வைத்து அரசாணை வெளியிட்டார்.

சமுதாயப்  பணி

தனது நடிப்பாலும், நகைச்சுவை கலந்த சமூக கருத்துகளாலும் மக்களை ஈர்த்தவர் நடிகர் விவேக். அனைவராலும் ‘சின்ன கலைவாணர்’ என்று அன்பாக அழைகக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அவர் விட்டுச்சென்ற மரம் நடும் பணியை, அவரது பெயரில் இளைஞர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

கோரிக்கை மனு

இந்நிலையில் விவேக்கின் மனைவி அவர் வாழந்த வீடு அமைந்துள்ள தெருவுக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தார். இதனையடுத்து விவேக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அரசாணை வெளியிட்டார். அவர் உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே பத்மாவதி நகர் பிரதான சாலை என்ற தெருவின் பெயர் சின்ன கலைவாணர் விவேக் சாலை என மாற்றி பலகை வைத்தது சென்னை மாநகராட்சி.

அமைச்சர் பேச்சு

சென்னை விருகம்பக்கம் சட்டமன்ற தொகுதியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதை உறுதிப் படுத்தும் வகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மிகவும் பிடித்த நடிகர். விவேக் வாழந்த தெருவுக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என்ற அவர் மனைவியின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனே அரசாணை வெளியிட்டார் என்று கூறினார்.

பூச்சி முருகன் கடிதம்

இந்நிலையில் விவேக்கிற்கும் தனக்கும் இடையான நட்பை பற்றி பூச்சி முருகன் தனது  கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் தினமும் காலை ஒரு  முறையும் மாலை ஒரு முறையும் அழைத்து பேசுவார். அப்படிதான் கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதியும் அழைப்பார் என்று காத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் அன்று அழைப்புக்கு பதிலாக அவரது மரண செய்தி தான் வந்தது. என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. அவரின் உதவியாளர் செல் முருகனிடம் பேசித்தான் விவேக் இல்லாத குறையை தீர்த்துக் கொள்கிறேன் என்று நடிகர் பூச்சி முருகன் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

Related posts