ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி தேர்தல்
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிடபட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த வாக்குகள் எண்ணும் பணியானது இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி மோடி வெளியிடுகிறார்.மேலும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாட்டின் 15வது ஜனாதிபதி யார் ? என்ற விவரம் மாலைக்குள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

