செஸ் ஒலிம்பிக் போட்டி குறித்து உள்ள விளம்பர பேனரில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை அச்சிடாத நிலையில், அதைக் கண்ட தமிழ்நாடு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணித் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தமிழ்நாடு அரசின் இச்செயலைக் கண்டித்து பிரதமரின் புகைப்படத்தை ஒட்டினார்.
பிரதமரின் புகைப்படம்
44ஆவது செஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் விளம்பர பேனர்கள் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து செஸ் ஒலிம்பிக் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு வைத்த விளம்பர பேனர்களில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை அச்சிடவில்லை.
இதைக் கண்டித்து தமிழ்நாடு அரசின் தவறை உணர்த்திடும் வகையில், தமிழ்நாடு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு திறன் அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் துணைத் தலைவர் பாலாஜி தங்கவேல் ஆகியோர் விளம்பர பேனரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டினர்.

