Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»மூதாட்டியிடம் செயின் பறிப்பு – 3 பேர் சிறையில் அடைப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு – 3 பேர் சிறையில் அடைப்பு

March 22, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மூதாட்டியிடம் செயின் பறித்த வழக்கில் மூன்று பேரை அசோக் நகர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ்செல்வி (வயது 63). இவரது கணவர் சின்னையா, கடந்த 2021- ஆம் ஆண்டு உடல் நலக்குறைவுக் காரணமாக காலமானார்.‌

இவரது மூத்த மகள் வெளிநாட்டில் கணவருடன் வசித்து வரும் நிலையில் இவர் தனது மகன் ராஜேஷ் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 14- ஆம் தேதி அன்று மூதாட்டி தமிழ்செல்வி தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் மாம்பலத்தில் உள்ள மகா வல்லபகணபதி திருக்கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்.

பின்னர் தமிழ்செல்வி வீட்டருகே இறங்கி குடியிருப்புக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் தமிழ்செல்வி அணிந்திருந்த 9 சவரன் தங்கநகையைப் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தமிழ்செல்வி தனது மகன் ராஜேஷுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்து தாயிடம் விசாரித்து விட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க :  இருமல் மருந்து சம்பவம் தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

தகவலின் பேரில் விரைந்து வந்த அசோக் நகர் காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுச் செய்தனர். அத்துடன், தப்பியோடிய கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அதைத் தொடர்ந்து, ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்கிற பர்மா சீனு (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கடந்த 2025- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழிப்பறி வழக்கில் பர்மா சீனுவை பழவந்தாங்கல் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு மார்ச் 06- ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்த பர்மா சீனு, ஆட்டோவை ஓட்டி வாழலாம் என நினைத்துள்ளார். எனினும், ஆட்டோ தவணை செலுத்த முடியாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் மூதாட்டியிடம் பறித்த செயினை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் (வயது 34) என்பவரிடம் கொடுத்து அவரது வங்கிக்கணக்கின் மூலம் அடகு வைத்து ரூபாய் 5.2 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.

இதையும் படிக்க :  சீரியல் நடிகை உடை மாற்றுவதை வீடியோ எடுத்த ராணுவ வீரர் கைது

சிறையில் இருந்தபோது பழக்கமான ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ரவுடி பாம்பே சத்யா என்பவரின் காதலி அனிதாவிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்ததும், அனிதா அந்த பணத்தில் 85,000 ரூபாயை வழக்கறிஞரிடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பர்மா சீனு, அனிதா, ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூபாய் 1.91 லட்சம் ரொக்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article50% டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ‘கணையத்தில்’ கொழுப்பு – புதிய சவாலில் இருந்து மீள்வது எப்படி?
Next Article தாய், மகளை கடித்துக் குதறிய நாய்… வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.