Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»தாய், மகளை கடித்துக் குதறிய நாய்… வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்

தாய், மகளை கடித்துக் குதறிய நாய்… வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள்

March 22, 20262 Mins Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாகப்பட்டினம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு இரு பெண்களை கடிக்கவிட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நாய் கடித்துக் குதறியதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது நடவடிக்கை பாயுமா?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது பக்கத்து வீட்டில் பழனி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராமலிங்கத்தின் இடத்தை வாங்கியே பழனி வீடு கட்டி குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில் இரு குடும்பத்தினர் இடையே சிறு சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே பேச்சு எதுவும் இல்லாத அளவிற்கு பகை உருவாகியுள்ளது. அத்துடன் அடிக்கடி இரு குடும்பத்தினரும் முட்டிக் கொண்டே இருந்துள்ளனர்.

அண்மையில் ராமலிங்கத்தின் மகள் பவிதா என்பவர், தனது தந்தை வீடான தோப்புத்துறை மடவிலாகத்துக்கு வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 13ஆம் தேதி தந்தை வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது, பழனி வீட்டில் வளர்த்து வரும் நாயை, அவர்கள் அவிழ்த்துவிட்டதாக கூறப்படுகிறது. முன்கேட்டு திறந்திருந்ததும் அந்த நாய் வெளியே ஓடிச் சென்று பவிதாவை கடித்துள்ளது.

அதை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் அச்சத்தில் கதறியுள்ளார். பவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாயார் ஓடி வந்துள்ளார். வந்த உடனே மண்ணை அள்ளி நாய் மீது போட்டு விரட்ட முயற்சித்துள்ளார். மண்ணை அள்ளிப் போட்டதும் மூர்க்கத்தனமாக மாறிய நாய், தாய் மகள் இருவர் மீதும் பாய்ந்து கடித்துள்ளது. அதைப் பார்த்து எந்தவொரு சலனமும் கொள்ளாத பழனியின் குடும்பத்தினர், விடாமல் நாய் கடிக்கும் நோக்கில் கேட்டை இழுத்து அடைத்துள்ளனர்.

இதையும் படிக்க :  “மக்களை ஏமாற்றிய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” - பழனிசாமி ஆவேசம்

இதனால் ஆத்திரமடைந்த பவிதாவின் தாயார், உருட்டுக் கட்டையை எடுத்து வந்து நாயை நையப்புடைத்துள்ளார். அதைக் கண்டு பின் வாங்காத நாய், மேலும் சீற்றத்துடன் பாய்ந்து பாய்ந்து கடித்துள்ளது. நாயின் உரிமையாளர்கள் வீட்டிற்குள் இருந்து கைகட்டி அதை வேடிக்கை பார்த்துள்ளனர். வளர்ப்பு நாயுடன், தெரு நாய்களும் சுற்றி வளைத்ததால் தாயும், மகளும் செய்வது அறியாமல் கடிபட்டு வலியால் துடித்துள்ளனர். நாய்க்கடிக்கு இடையிலும் அவர்கள் இருவரும் பழனி குடும்பத்தினரை திட்டித் திமிறியுள்ளனர்.

அப்படியும் அவர்கள் செவி சாய்க்காததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பவிதா, இரும்புக் கம்பியை எடுத்துவந்து விரட்டி விரட்டி கடித்த நாயை கடுமையாக தாக்கினார். வலி தாங்க முடியாத நாய் இரும்புக் கேட்டுக்குள் ஏதாவது வழி கிடைக்காதா என்று முண்டியடித்தது. செல்லமாக வளர்ந்த நாயும் அடிபட்டு துடிப்பதை பழனியின் வீட்டினர் உள்ளே இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். கடைசியாக எஜமானர்களும் உதவிக்கு வர மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்த நாய், அடி வாங்கி சாவதைவிட தப்பித்து ஓடி விடலாம் என்ற எண்ணத்தில் தலைதெறிக்க ஓடியது.

இதையும் படிக்க :  4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண்ணும், அவரது தாயாரும் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர்கள் நாயை அவிழ்த்துவிட்டு கடிக்கவிட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரின்பேரில் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாயையும், மகளையும் பக்கத்து வீட்டு நாய் பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி வேதாரண்யத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தாவது ஈவு இரக்கமின்றி வளர்ப்பு நாயை ஏவி கடிக்கவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமூதாட்டியிடம் செயின் பறிப்பு – 3 பேர் சிறையில் அடைப்பு
Next Article பலே பைக் திருடன் கைது… திருட்டு பைக்குகளை விற்று சொகுசு வாழ்க்கை… சிக்கியது எப்படி…?

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.