சமூகம் - வாழ்க்கைசினிமா

இணையத்தை கலக்கும் தனுஷ் பட மேக்கிங் வீடியோ!

மேக்கிங் வீடியோ

கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான சாணிக் காயிதம் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வந்தார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Related posts