சமூகம் - வாழ்க்கைசினிமா

அஜித்தை சந்திக்கவே முடியவில்லை – பிரபல இயக்குனர் பரபரப்பு!

பிரபல இயக்குனர்

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அதனைத்தொடர்ந்து மலையாளத்தில் 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தை இயக்கினார். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரித்விராஜ் நடிப்பில் ‘கோல்டு’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில், நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் 8 ஆண்டுகளாக அஜித் சாரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Related posts